-
Continue reading →: அதகளம் – அத்தியாயம் 6 – புதுப்பேட்டை நிலவு!
“ஏய் எங்க வந்து யாரப் பத்தி தப்பா பேசுற?” என சிக்கந்தர் கேட்க, கூட்டம் கூடிவிட்டது.அப்போதுதான் ஒன்றை கவனித்தான் விஜய் ஆனந்த். அந்தக் கடைக்குள் ரஹீமின் ஆளுயர ப்ளக்ஸ் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லா கடைகளிலும் இப்படித்தான் இருந்தது. அப்போதுதான் புரிந்தது, இது ‘அப்துல் ரஹீமின் ஏரியா’ என்று.“இவன் மண்டைய இந்த இரும்பு ராடால பொளக்காம விடமாட்டேன்” என்ற சிக்கந்தரை அனைவரும் தடுத்தனர். அந்த…
-
Continue reading →: அதகளம் – அத்தியாயம் 5 – புதுப்பேட்டை சவால்!
ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இவனை சேர்த்து விட்டது. யாரையும் தெரியாத சென்னையில் நடந்து கொண்டிருந்தான். ஒரு பிச்சைக்காரன் குறுக்கிட்டு, “ஐயா யாருமில்லாத அனாதைங்க, தர்மம் பண்ணுங்க சாமி” என்றான். “ஐயோ பாவம், ஏம்ப்பா அம்மா அப்பால்லாம் இல்லையா” என்று கேட்டான்.“எங்கம்மா ஒருத்தன்கூட ஓடிட்டா, அப்பன் ஒருத்திகூட…”“அப்படின்னா உங்க தாத்தா பாட்டி?”“யோவ், காசு இருந்தா போடு, இல்லன்னா மூடிகினு போ. நீ குடுக்கிற பிச்ச காசுக்கு கொலம் கோத்தரமெல்லாம்…
-
Continue reading →: அதகளம் – அத்தியாயம் 4 – இலட்சியப் பாதை!
வார்டன் சண்முகம் சில மாணவர்களோடு வந்திருந்தார்.“டேய், உன்னக் காணோமுன்னு ஊரெல்லாம் சல்லடை போட்டு தேடிட்டு வந்தா இங்க உக்காந்துருக்கியா” என்று கோபமாகக் கேட்டார்.“போகச் சொன்னா போயிருவியா, அவ்வளவு திமிரா?” என்றார்.“சார், இத அழிக்கப் போறதில்ல. அவரும் என்னை மாதிரி பெத்தவங்களால நிராகரிக்கப்பட்டவர்தான். அப்படிப்பட்டவர் ஜெயிச்சது எனக்கு பெரிய ஊக்கமா இருக்கும்னு நான் நம்புறேன்” என்றான் விஜய் ஆனந்த். “இன்னிக்கு என்னாச்சு தெரியுமா? அவன அரஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருக்காங்க. எப்புடியும்…
-
Continue reading →: அதகளம் – அத்தியாயம் 3 – ஒரு நாயகனின் உதயம்!
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், அவனது வகுப்பாசிரியரும் விடுதி காப்பாளருமான சண்முகம்.“சொல்லுங்க சார்”“என்னடா ஊதிகிட்டே வர்ற. கைய காட்டு” என கையைப் பார்த்தவர் கோபமானார்.“என்ன இது”“பச்சைங்க சார்”“அது தெரியுது, யார் இது?”“சார் இவரு பேரு பீட்டர். கார் ரேசுல…” சொல்வதற்குள் கையைக் காட்டி நிறுத்தினார். “எங்களுக்கும் தெரியும். இத எதுக்கு பச்ச குத்தியிருக்க”“சும்மா சார். எல்லாரும் நடிகர்கள் உருவத்த பச்ச குத்துனாங்க. நான் இவரு உருவத்த குத்தினேன்.”“இன்னிக்கு பேப்பர்ல இவனப் பத்தி…
-
Continue reading →: அதகளம் – அத்தியாயம் 1 – நள்ளிரவில் ஏற்பட்ட பேரதிர்ச்சி!“டேய் ஆனந்த், நியூ இயர் டைம்ல யாராச்சும் தூங்குவாங்களா? எந்திரிடா” நண்பனின் குரலுக்குச் செவிசாய்த்து கண்ணைக் கசக்கினான் விஜய் ஆனந்த். “டேய் ராகுல், நான் நியூ இயரெல்லாம் கொண்டாடுறது இல்ல. தமிழ்புத்தாண்டு மட்டும்தான்.” “ரொம்பத்தான்டா. நீ இப்புடியே இரு. எனக்கொண்ணும் பிரச்சினை இல்ல. இன்னிக்கு ரஹீம் ரேஸ் இருக்கு. இண்டோர் ஸ்டேடியத்துல லைவ் டெலிகாஸ்ட் போடுறாங்க. எல்லாரும் போறாங்க. வாடா” என்று ராகுல் சொல்ல, தட்டிக் கழிக்கப்பார்த்தான் விஜய் ஆனந்த்.…
-
Continue reading →: அதகளம் – (i) முன்னோட்டம்
என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம். அதகளம் எனும் என் கதை அச்சாகி வெளியாகிய நாள். 2016ஆம் ஆண்டு நடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் காவ்யா பதிப்பகத்தின் மூலம் இக்கதை குருநாவலாக வந்தது. ஆனால், அப்போது நான் யூ.பி.எஸ்.சி. தேர்வுக்காக சென்றதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. என் சார்பாகக் கலந்துகொண்ட என் தந்தைக்கு காவ்யா பதிப்பகத்தின் நிறுவனர் திரு.காவ்யா சண்முக சுந்தரம் பொன்னாடை போர்த்தியதாக என் தாய் ஆனந்தக்…
-
Continue reading →: என் காதல்… – காதல் கவிதை
நீ என்னோடுஇருந்தால்எனக்குமகிழ்ச்சிஎன்பதல்லஎன் காதல்உன் மகிழ்ச்சியைக்காண்பதேஎன் காதல்என்னோடுஇருந்தால்மகிழ்வாய்என்றிருந்தேன்இல்லையென்றுஅறிந்தேன்எங்கே உனக்குமகிழ்ச்சியோஅங்கே செல்அதுவே எனக்குமகிழ்ச்சிஅதுவேஎன் காதல்! –குரு.விஷ்ணுகிரி
-
Continue reading →: மறந்துவிடாதே! – காதல் கவிதை
அலைபேசியில் ஏனடி அலைவரிசை மாற்றம் திசைமாறி வீசுது என் காதல் காற்றும் எத்தனை அழைத்தும் பதிலில்லை தூதுகள் அனுப்பியும் பயனில்லை என்னடி ஆச்சு என் கல்நெஞ்சக்காரி என்னதான் ஆச்சு நீ கோவிக்கும் மாரி என் கொஞ்சல்கள் உனக்கு நினைவில்லையா என் கெஞ்சல்கள் காதில் விழவில்லையா துடிக்கும் இதயத்தை நிறுத்தி விடாதே அது உனக்காய் துடிக்குது மறந்து விடாதே! நீ மறந்தால் என் இதயம் துடிக்க மறக்கும் இதையும் மறந்துவிடாதே! –…
